வேட்டையன் படத்தின் 2 - ம் பாகம் வெளிவருமா.. இயக்குனர் கூறிய அதிரடி தகவல்

Bhavya
in திரைப்படம்Report this article
வேட்டையன்
TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வேட்டையன். இந்த படம் லைகா நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கிய கருத்தையும் இப்படத்தில் இயக்குனர் ஞானவேல் பேசியிருந்தார்.
ரஜினியை தொடர்ந்து இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த படம் வெளிவந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் படி, 10 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 95 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 - ம் பாகம்
இந்நிலையில், வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று இயக்குனர் TJ ஞானவேலிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு, " வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது.
ரஜினியின் கதாபாத்திரத்தில் பேக் ஸ்டோரியை வைத்து ஒரு கதை எடுக்க விரும்புகிறேன். ரஜினி சார் ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக வேட்டையன் 2 - ம் பாகம் வெளிவரும்" என கூறியுள்ளார்

பெரியார் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்-வைகோ! IBC Tamilnadu
