ஜப்பானில் வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்.. நம்பர் 1 இடத்தில் சூப்பர்ஸ்டார்
வேட்டையன்
கடந்த ஆண்டு இயக்குநர் TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், கிஷோர், அசல் கோலார் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். முக்கியமான கருத்தை பேசிய இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜப்பானில் ரிலீஸ்
கடந்த வாரம் வேட்டையன் படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரஜினியின் படங்களுக்கு எப்போதுமே ஜப்பானில் நல்ல வரவேற்பு கிடைக்கும். முத்து, தர்பார், எந்திரன் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இந்தியாவில் உள்ள PVR INOX போன்ற ஜப்பானில் உள்ள மிகவும் பிரபலமான மல்டிபிளக்ஸ் திரையரங்கில் வேட்டையன் படம் சிறப்பாக ஓடி ஒரே வாரத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இதில் ரஜினி மற்றும் பகத் பாசில் கதாபாத்திரங்கள் அங்குள்ள மக்கள் அதிகம் ரசித்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.