ரஜினிகாந்தின் வேட்டையன் 16 நாட்களில் செய்துள்ள வசூல் மற்றும் ஷேர்.. எவ்வளவு தெரியுமா
வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் இணையும் 4வது திரைப்படம் இது என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு படத்தின் மேல் இருந்தது.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக வேட்டையன் அமைந்தது. அதே சமயம் சமூகத்திற்கு தேவையான கருத்தையும் இப்படத்தில் பேசியிருந்தார் இயக்குனர் ஞானவேல்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற வேட்டையன் படம் கடந்த வாரம் வசூலில் சற்று சரிவை சந்தித்தது. அதன்பின், எதிர்பார்த்த அளவிற்கு இப்படத்தின் வசூல் அதிகரிக்கவில்லை.
வசூல் மற்றும் ஷேர்
இந்நிலையில், வேட்டையன் திரைப்படம் உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்தும் அதில் கொடுக்கப்பட்டுள்ள ஷேர் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 16 நாட்களில் உலகளவில் ரூ. 246.8 கோடி வசூல் செய்துள்ளது. பெறப்பட்ட வசூலில் இருந்து ஷேர்ராக ரூ. 120 கோடிக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
