வேட்டையன் படம் 14 நாட்களில் செய்த வசூல்.. இத்தனை கோடியா
வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனத்துடன் ரஜினிகாந்த் இணையும் 4வது திரைப்படம் இது.
இப்படத்தை இயக்குனர் TJ ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் ஞானவேல் எடுத்திருந்தார்.
ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாகவும், அதே சமயம் சமூகத்திற்கு தேவையான கருத்தையும் இப்படத்தில் பேசியிருந்தார் இயக்குனர் ஞானவேல்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற வேட்டையன் படம் கடந்த வாரம் வசூலில் சற்று சரிவை சந்தித்தது. அதன்பின், எதிர்பார்த்த அளவிற்கு இப்படத்தின் வசூல் அதிகரிக்கவில்லை.
வசூல் விவரம்
இந்த நிலையில், 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள வேட்டையன் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் மட்டுமே ரூ. 243 கோடி ஆகும். மேலும் தமிழ்நாட்டில் வேட்டையன் படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
