தமிழ்நாட்டில் 4 நாட்களில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
வேட்டையன்
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன். கடந்த 10ஆம் தேதி வெளிவந்த இப்படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியிருந்தார்.
இவர் கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின், இவர் இயக்கி ஜெய் பீம் படம் ஆஸ்கர் வரை பேசப்பட்டது. சமூக அக்கறையுடன் இவர் இயக்கி வரும் இப்படங்களின் வரிசையில் தற்போது வேட்டையன் படமும் இணைந்துள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல வசூல். உலகளவில் இப்படம் 4 நாட்களில் ரூ. 200 கோடியை கடந்துள்ளது.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 4 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம். வேட்டையன் படம் 4 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 77 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
