வேட்டையன் படம் லாபமா? நஷ்டமா? முழு பிசினஸ் ரிப்போர்ட் இதோ
வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 10ஆம் தேதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க TJ ஞானவேல் இயக்கியிருந்தார்.
மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வேட்டையன் படம் உலகளவில் ரூ. 158 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் பிசினஸ் ரிப்போர்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் லாபமா அல்லது நஷ்டமா என பார்க்கலாம் வாங்க.
லாபமா? நஷ்டமா?
வேட்டையன் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 300 கோடி ஆகும். இதனை இயக்குனர் ஞானவேல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வேட்டையன் படத்தின் ஓடிடி உரிமை ரூ. 85 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதே போல் தென்னிந்திய சாட்டிலைட் உரிமை ரூ. 65 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளது. மேலும், ஹிந்தி சாட்டிலைட் மற்றும் திரையரங்க உரிமை ரூ. 47 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இசை உரிமை ரூ. 12 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இதுவே ரூ. 210 கோடி வரை வசூல் செய்துள்ளது.
பட்ஜெட்டில் 80 சதவீதம் வரை ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது. ரிலீஸுக்கு பின் தற்போது வசூல் வேட்டையாடி வரும் வேட்டையன் கேரளாவில் லாபத்தை கொடுக்க துவங்கியுள்ளது.
இன்னும் சில நாட்களில் அனைத்து இடங்களிலும் வேட்டையன் படம் லாபத்தை கொடுத்துவிடும். இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கம் என அனைத்து இடங்களிலும் வேட்டையன் படம் லாபகரமாக அமையும் என சொல்லப்படுகிறது.