வேட்டையன் டீசரில் அமிதாப் பச்சன் குரல் குறித்து எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. அதிரடி முடிவெடுத்த படக்குழுவினர்
ரஜினியின் வேட்டையன்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் போன்ற சிறந்த படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என ஒரு நட்சத்திர கூட்டம் நடித்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் அக்டோபர் 10 - ம் தேதி இந்த படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் சில தினங்களுக்கு முன்பு பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.
இதில் படக்குழுவினர், ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர். மேலும், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
வெளியான புது அப்டேட்
அதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன் குரலில் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு பெறாததால் தற்போது, படக்குழுவினர் இதற்கு ஒரு தீர்வு கண்டு பிடித்துள்ளனர்.
அதாவது, இந்த படத்தில் அமிதாப் பச்சன் தன் சொந்த குரலில் பேசவுள்ளார்,அதனை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டு அனைத்து மொழிகளிலும் வெளியிட உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
