தயாரிப்பாளருக்கு லாபமா வேட்டையன் படம்.. இதுவரை எவ்வளவு ஷேர் தெரியுமா
வேட்டையன்
TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
இது லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 4வது திரைப்படமாகும். வேட்டையன் படம் இதுவரை உலகளவில் ரூ. 223 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதுவரை செய்துள்ள ஷேர்
இந்த நிலையில், வேட்டையன் படம் உலகளவில் செய்த வசூல் மூலம் ரூ. 100 கோடி வரை ஷேர் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். ரிலீஸுக்கு முன் செய்யப்பட்ட பிசினஸ் மூலம் ரூ. 200 கோடி வசூல் கிடைத்தது.
ரிலீஸுக்கு பின் இப்படம் ரூ. 100 கோடி ஷேர் செய்துள்ள நிலையில், வேட்டையன் படம் தயாரிப்பாளருக்கு கண்டிப்பாக லாபகரமான படம் தானாம். தமிழ்நாட்டில் இப்படத்தின் வசூல் குறைய காரணமாக கனமழை என சொல்லப்படுகிறது.
கனமழை இல்லையென்றால் கண்டிப்பாக வேட்டையன் படம் இன்னும் அதிக லாபத்தை கொடுத்திருக்கும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
