11 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படம் வெளிநாட்டில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
வேட்டையன்
ஜெய் பீம் என்ற வெற்றிப்படம் கொடுத்த ஞானவேலுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய வேட்டையன் திரைப்படம்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.
மேலும் ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா, அபிராமி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 10 - ஆம் தேதி வெளிவந்த இந்த படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வெளிநாட்டில் செய்த வசூல்
11 நாட்களில் வெளிநாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் படம் 11 நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே ரூ. 84 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் என்னென்ன சாதனைகளை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.