தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்ததா வேட்டையன்.. பார்க்கலாம் வாங்க
வேட்டையன்
பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கடந்த 10ஆம் தேதி வெளியான திரைப்படம் வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் இப்படத்தில் நடித்தார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.
மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
இந்த நிலையில், உலகளவில் ரூ. 241 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள வேட்டையன் படம் தமிழ்நாட்டில் 12 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 12 நாட்களில் வேட்டையன் படம் ரூ. 99.6 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
