மீண்டும் விஜய்யை சீண்டிய ரஜினி? வேட்டையன் டீசரில் இதை கவனித்தீர்களா
காக்கா - கழுகு சர்ச்சையை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. கழுகு உயரமாக பறக்கும், அதற்கு ஈடாக காக்கா பறந்து முயற்சித்து கொத்த வரும், ஆனால் கழுகு அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மேலே பறக்கும் என ரஜினி ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார்.
காக்கா என விஜய்யை தான் ரஜினி குறிப்பிடுகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் லியோ பட வெற்றி விழாவில் விஜய்யும் 'காக்கா-கழுகு' என குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனாலும் விஜய் இறுதியில் 'ஒரே உலகநாயகன்.. ஒரே சூப்பர்ஸ்டார்.. ஒரே தல.. எனக்கு ரசிகர்கள் கொடுத்த தளபதி பட்டம் போதும்' என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மீண்டும் சீண்டிய ரஜினி?
இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படமான வேட்டையன் படத்தின் டீஸர் வெளிவந்து இருக்கிறது. அதில் 'குறி வெச்சா இரை விழணும்' என ரஜினி பேசும்போது பின்னணியின் கழுகு bgm வருகிறது.
இது மீண்டும் காக்கா - கழுகு சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. இதை வைத்து மீண்டும் ட்விட்டரில் வாக்குவாதம் வெடித்து இருக்கிறது.
Saami neenga kalugu than ?. Antha pattam lam inga yarum kekkala..
— Guna Adhithyan (@TheriGunaa) December 12, 2023
Atha veche marubadi engala vambuku ilukkathinga AL la ?
Teaser looks good with Superb BGM by Ani
— Vinay Pawar ? (@Vinay_Pawar25) December 12, 2023
End dialog, so Kaka vs Kalugu face off continues