முதலிடத்தில் விஜய், ரஜினிக்கு 5ம் இடமா? சென்னையின் முன்னணி தியேட்டர் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்
2021ம் வருடம் நிறைவடையும் நிலையில், இந்த வருடம் முழுவதும் சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்திய நடிகர்கள் மற்றும் படங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் சமீபத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது சென்னையில் முக்கிய தியேட்டர்களில் ஒன்றான வெற்றி தியேட்டர் இந்த வருடத்தின் டாப் 10 படங்கள் லிஸ்டை வெளியிட்டு இருக்கிறது.
விற்கப்பட்ட டிக்கெட்டுகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ரேட்டிங் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர் படம் இருக்கிறது. டாக்டர் இரண்டாம் இடமும், மாநாடு மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் மூன்றாவது மட்டும் நான்காம் இடத்தை முறையே பிடித்து உள்ளன.
தீபாவளிக்கு ரிலீஸ் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் ஐந்தாம் இடம் மட்டுமே பிடித்து உள்ளது.
வெற்றி தியேட்டர் உரிமையாளர் வெளியிட்டு இருக்கும் 2021 டாப் 10 படங்கள் லிஸ்ட் அவரது ட்விட்டில் இதோ..
And here we Go #VettriTopTen2021 !
— Rakesh Gowthaman (@VettriTheatres) December 28, 2021
1 #Master
2 #Doctor
3 #Maanaadu
4 #Karnan
5 #Annaatthe
6 #NoWayHome *
7 #GodzillavsKong
8 #Aranmanai3
9 #Sultan
10 #Pushpa *
Rankings are based on total no. of tickets sold for that movie in #Vettri complex #VettriStats2021
*Still running pic.twitter.com/HNdVDydUSU