சினிமாவில் நடந்த கசப்பான அனுபவம்.. நடிகை விசித்ராவிடம் அப்படி நடந்து கொண்ட கவுண்டமணி
நடிகை விசித்ரா
போர்க்கொடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை விசித்ரா. நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
மேலும் குக் வித் கோமாளி, பிக் பாஸ் என சின்னத்திரையில் வலம் வரும் நடிகை விசித்ரா சினிமாவில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

கசப்பான அனுபவம்
இதில் "நான் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறேன். அப்போது நன்றாக தான் அனைத்தும் போய்க்கொண்டு இருந்தது. பெரிய குடும்பம் திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த படத்தின் பூஜையிலும் நான் கலந்துகொண்டேன்".
"அப்போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் என்னிடம் வந்து கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல்ல வேண்டும் என கூறினார். நான் எதற்காக சார் என கேட்டேன். இல்ல நீ வந்து ஒரு வணக்கம் மட்டும் சொல்லு என கூறி என்னை அழைத்து சென்றார்".

"நாம் ஒரு கதாபாத்திரத்தில் கமிட் ஆகிட்டோம், இனிமேல் படத்தில் நடிக்க போகிறோம். ஆனால், இதற்கும் வணக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் கூட நான் அவருடன் சென்றேன், அங்கு இருந்த கவுண்டமணி சாருக்கு வணக்கம் சொன்னேன்".
"அப்போது அவர் நான் வணக்கம் வைத்ததை பார்த்து 'இப்போ தான் வணக்கம் சொல்லுவீங்களா' என கேட்டார். அவர் ஏன் அப்படி பேசினார் என இதுவரை எனக்கு தெரியவில்லை. பொதுவாக அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது.ஆனால், சினிமாவில் இதெல்லாம் மிகவும் சகஜம்" என விசித்ரா கூறியுள்ளார்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu