பாலிவுட் காதல் ஜோடி விக்கி கௌஷல் கத்ரீனா கைஃபுக்கு விரைவில் திருமணமா, கசிந்த தகவல்:
பாலிவுட்டின் உச்ச கதாநாயகிகளில் ஒருவர் தான் கத்ரீனா கைஃப். கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கிய இவர் ஹிந்தி பட உலகின் பல முன்னணி ஸ்டார்களின் படங்களில் நடித்து முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
கடந்த 2015-ம் வெளியான மசான் என்னும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்கி கௌஷல். அதற்கடுத்து இவரும் உரி போன்ற பல முக்கிய படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்தார் உதாம் என்னும் படம் நேரடியாக OTT-ல் வெளியாகி வெற்றியடைந்துள்ளது.
விக்கி கௌஷலும் கத்ரீனா கைஃபும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர் அதனை நடிகர் ஹர்ஷ்வர்தன் கபூரும் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தான் இருவருக்கும் ஆகஸ்ட் மாதமே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் வருகிற நவம்பரில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்காக ஆடை செலக்ஷன் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu