விக்கி கௌஷல்-கத்ரீனா கைப்பிற்கு குழந்தை பிறந்தது... பிரபலம் வெளியிட்ட அறிவிப்பு
நட்சத்திர ஜோடி
பாலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிய டாப் நாயகிகளில் ஒருவர் தான் கத்ரீனா கைஃப்.
இவர் தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். கடந்த 2003ம் ஆண்டு வெளியான பூம் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
முதல் படமே நல்ல அறிமுகம் கொடுக்க முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், அமீர்கான், ரன்பீர் கபூர் என பலருக்கு ஜோடியாக நடித்தார்.

குழந்தை
நிறைய காதல் கிசுகிசுக்களிலும் சிக்கிய கத்ரீனா கைஃப் கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் விக்கி கௌஷலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷல் ஜோடி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்கள். இந்த நிலையில் இருவருக்கும் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.

இன்ஸ்டாவில் பதிவிட பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.