10 நாட்களில் விடாமுயற்சி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
விடாமுயற்சி படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இப்படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அஜித் - மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.
ஆக்ஷன் எமோஷனல் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். சிலர் இப்படத்தின் மீது விமர்சனத்தையும் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இந்த நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் ரூ. 145 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

21 ஆண்டுகளாக இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த பொருள்.. டாக்டர்கள் அதிர்ச்சி - என்ன தெரியுமா? IBC Tamilnadu
