7 நாட்களில் தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பிய விடாமுயற்சி வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
2025ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த படம் விடாமுயற்சி. அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தனர்.
மேலும், முன்னணி இசையமைப்பாளரான அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். த்ரிஷா இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மிரட்டலான திரைக்கதை, வெறித்தனமான ஆக்ஷன் ப்ளாக், எமோஷனல் காட்சிகள் என அனைத்தையும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், மாபெரும் வெற்றியடைந்துள்ள விடாமுயற்சி திரைப்படம், 7 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 7 நாட்களில் இப்படம் ரூ. 86 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் ரூ. 100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா? Manithan

அடுக்குமாடிக் குடியிருப்பில் 300 பூனைகளை வளர்த்த பெண் - விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி! IBC Tamilnadu
