அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி அப்டேட்
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தின் நடிப்பில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்திலும் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார்.

அப்டேட்
இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான படப்பிடிப்பையும் துவங்கினர் அஜித். இந்த நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக விடாமுயற்சியின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் இணைகிறார்.

தீபாவளிக்கு விடாமுயற்சி வெளிவரும் என கூறுகின்றனர். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கண்டிப்பாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan