அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் புக்கிங் ஓப்பன் ஆனது.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
விடாமுயற்சி
2025ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று விடாமுயற்சி. இந்த ஆண்டே இப்படம் வெளிவரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் ரிலீஸ் 2025 பொங்கலுக்கு தள்ளிப்போய்விட்டது.
மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த விடாமுயற்சி படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, நேற்று இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியது. இதில் தொகுப்பாளினி ரம்யா இணைந்துள்ளார் என அறிவித்து இருந்தனர்.
புக்கிங் அப்டேட்
ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் மற்றும் ட்ரைலர் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. அப்டேட் வெளிவரும் என ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் வெளிநாட்டு புக்கிங் துவங்கியுள்ளது. ஆம், UK விடாமுயற்சி படத்திற்கான புக்கிங் துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அங்குள்ள அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
You May Like This Video