படப்பிடிப்பு நடக்கும் போதே பல கோடிகளை வசூல் செய்த விடாமுயற்சி.. விஜய், ரஜினியை தூக்கி சாப்பிட்ட அஜித்
அஜித்தின் விடாமுயற்சி
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளிவந்தது.
இந்த புகைப்படங்கள் அனைத்துமே அஜித் தான் எடுத்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.
ஆம், விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதில் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.
விஜய், ரஜினியை தூக்கி சாப்பிட்ட அஜித்
இந்நிலையில், சாட்டிலைட் உரிமை ரூ. 150 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ. 100 கோடிக்கும் விற்பனை செய்து மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது விடாமுயற்சி திரைப்படம். இதன்மூலம் இதற்கு முன் விஜய், ரஜினிகாந்த் படங்கள் செய்த சாதனைகளை முறியடித்துள்ளார் அஜித்.

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
