இலங்கையில் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்த மொத்த வசூல்.. முழு விவரம்
விடாமுயற்சி
திருவிழா இல்லை என்றாலும் நேற்று (பிப்ரவரி 6) தமிழ்நாடே திருவிழா கோலமாக இருந்தது.
காரணம் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுவதும் 3650 திரைகளுக்கு மேல் வெளியாகி இருந்தது, தமிழகத்தில் மட்டுமே 900க்கும் அதிகமான திரைகளில் வெளியாகி இருந்தது.
அஜித்துடன் த்ரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.
படத்தில் இடம்பெற்ற Sawadeeka பாடலுக்கு ஆட்டம் போடாத, ரீல்ஸ் செய்யாத அஜித் ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
இலங்கை
தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.
இலங்கையில் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி இந்திய மதிப்பில் ரூ. 36 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்! IBC Tamilnadu
