விடாமுயற்சிக்கு வந்த விமர்சனம்.. அஜித், தயாரிப்பாளர் ரியாக்ஷன் இதுதான்: மகிழ் திருமேனி பேட்டி
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க அசர்பைஜான் நாட்டில் நடப்பது போன்ற கதை தான். அஜித் மனைவி ரோலில் த்ரிஷா நடித்து இருந்தார்.
அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நெகடிவ் ரோல்களிலும் நடித்து இருந்தனர். படம் ரிலீஸ் ஆன முதல் நாளே படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வர தொடங்கியது. அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை என பலரும் விமர்சித்தார்கள்.
மகிழ் திருமேனி பேட்டி
இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி அளித்த பேட்டியில் "படம் எடுத்து முடித்து ரிலீஸ் ஆகிவிட்டது. அஜித் சார் மகிழ்ச்சியாக இருக்கிறார். தயாரிப்பு நிறுவனத்தில் தமிழ்குமரன் சார் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார். ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்பும்."
"சுபாஷ்கரன் சார் மகிழ்ச்சியாக இருக்கிறார். ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்பும். ஒரு இயக்குனராக நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்."
"உண்மையான ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பொதுவான audience-ம் மகிழ்ச்சி தான். இதைவிட வேறு என்ன வேண்டும்" என கேட்டிருக்கிறார் மகிழ் திருமேனி.
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)