உலகளவில் 11 நாட்களில் விடாமுயற்சி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது.. இதோ அந்த விவரம்
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான விடாமுயற்சி படம், கடந்த 6ம் தேதி வெளிவந்தது.
இப்படத்தை திரையில் காண எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். இவர்கள் கூட்டணியில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 11 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
இப்படம் உலகளவில் 11 நாட்களில் ரூ. 147 கோடி வசூல் செய்துள்ளது. விடாமுயற்சி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக குட் பேட் அக்லி படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆச்சு.. சோபிதா துலிபா எடுத்த திடீர் முடிவு - அதிர்ச்சி தகவல்! IBC Tamilnadu
