12 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் 12 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித், முதல் முறையாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடித்த படம் விடாமுயற்சி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்காக அஜித் ரூ. 105 கோடி சம்பளம் பெற்றார் என சொல்லப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த 6ம் தேதி வெளிவந்த இப்படம் மக்கள் பேராதரவை கொடுத்து வருகிறார்கள். சில கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் 12 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகளவில், ரூ. 147.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.