2 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அஜித்தின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
கடந்த 6ம் தேதி வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் 2 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகளவில் 2 நாட்களில் ரூ. 72 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதிக்குள் கண்டிப்பாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan