சில நிமிடங்களில் ஹவுஸ்ஃபுல் ஆகும் விடாமுயற்சி.. அட்வான்ஸ் புக்கிங்கில் மிரட்டும் அஜித்
விடாமுயற்சி
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த சவடீகா பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எங்கு திரும்பினாலும் இப்பாடலும் ரீல்ஸ் தான்.
பிக்பாஸில் கலக்கும் விஜய் சேதுபதியுடன் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் மகள் எடுத்த போட்டோ... செம வைரல்
2025 பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் விடாமுயற்சி படத்தின் அட்வான்ஸ் புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாடுகளில் துவங்கியது.
அட்வான்ஸ் புக்கிங்
இதுவரை அஜித்தின் எந்த திரைப்படத்திற்கும் கிடைத்திராத நல்ல ஓப்பனிங் வெளிநாடுகளில் விடாமுயற்சி படத்திற்கு கிடைத்துள்ளது. புக்கிங் ஓப்பன் ஆகிய சில நிமிடங்களிலேயே ஹவுஸ்ஃபுல் ஆகிவிடுகிறது என கூறுகின்றனர்.
இதுவரை அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே ரூ. 40 லட்சத்திற்கும் மேல் வசூல் வந்துள்ளது. இதனால் கண்டிப்பாக இப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.