ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் விடாமுயற்சி.. இதுவரை எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை வெளிவந்த இரண்டு பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், ரிலீஸுக்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது விடாமுயற்சி. ஆம், இப்படத்திற்கான வெளிநாட்டு ப்ரீ புக்கிங் துவங்கியுள்ள நிலையில், இதுவரை ரூ. 20 லட்சம் வசூல் செய்துள்ளது.