மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் விடாமுயற்சி செய்துள்ள வசூல்! எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த 6ம் தேதி வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார்.
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவருடைய இசை படத்திற்கு மாபெரும் பலத்தை கொடுத்துள்ளது.
மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் விடாமுயற்சி படம் கடந்துள்ள நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் நல்ல வசூலை பெற்றுள்ளது.
தமிழக வசூல்
இந்த நிலையில், மூன்று நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 61 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடிக்கும் மேல் தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.