ப்ரீ புக்கிங்கில் அஜித்தின் விடாமுயற்சி படம் தமிழகத்தில் மட்டுமே இதுவரை செய்துள்ள கலெக்ஷன்.. எவ்வளவு தெரியுமா?
விடாமுயற்சி
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் பிப்ரவரி 6 ஆகும், அஜித்தை எப்போது திரையில் காண்போம் என ஆவலாக உள்ளார்கள் ரசிகர்கள்.
காரணம் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படம் வரவில்லை, எனவே விடாமுயற்சி ரிலீஸ் ஆக ரசிகர்கள் படு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்க, அனிருத் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலர் நடித்துள்ளனர்.
டீஸர், டிரைலர், பாடல்கள் என ஏற்கெனவே வெளியாகிவிட்டது. விடாமுயற்சி படத்திற்கும் யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ப்ரீ புக்கிங்
தமிழகத்தில் மட்டுமே 900 திரைகளுக்கு மேலாகவும், மொத்தமாக உலகம் முழுவதும் 3650 திரைகளுக்கு மேலாகவும் விடாமுயற்சி படம் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே விடாமுயற்சி திரைப்படம் ரூ. 20 லட்சத்திற்கு மேல் கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
