விடாமுயற்சி படத்தின் டீசர்.. வெளிவந்த மாஸ் தகவல்
விடாமுயற்சி
துணிவு படத்திற்கு பின் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. முதல் முறையாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று முடிந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.
மேலும் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என்கின்றனர்.
படத்தின் டீசர்
விடாமுயற்சி படத்திலிருந்து இதுவரை போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில், வருகிற 31ஆம் தேதி தீபாவளிக்கு படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.