ஓடிடி-யில் வெளிவந்து நம்பர் 1 இடத்தை பிடித்த விடாமுயற்சி.. விவரம் இதோ
விடாமுயற்சி
2025ம் ஆண்டு வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் விடாமுயற்சி. பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் முதல் முறையாக அஜித் - மகிழ் திருமேனி இணைந்து பணிபுரிந்திருந்தனர்.
மேலும் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் அஜித்துடன் இணைந்து நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளிவந்த இப்படம் மக்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
ஓடிடி
மேலும் உலகளவில் ரூ. 150 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. நேற்று விடாமுயற்சி திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்தது.
இந்த நிலையில், திரையரங்கை தொடர்ந்து ஓடிடி-யிலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆம், இந்திய அளவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் நம்பர் 1 இடத்தை விடாமுயற்சி திரைப்படம் பிடித்துள்ளது.
இன்றைய நாளில் இந்திய அளவில் இருக்கும் டாப் 10 திரைப்படங்களில் விடாமுயற்சி நம்பர் 1 இடத்தில் இருக்கிறது என, நெட்பிளிக்ஸ் பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓடிடி-யில் விடாமுயற்சி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
