தமிழ்நாட்டில் 2 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
விடாமுயற்சி
2025ம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 6ம் தேதி வெளிவந்தது.
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பக்கம் சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை தெரிவித்து வந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
தமிழக வசூல்
உலகளவில் ரூ. 72 கோடியை கடந்துள்ள விடாமுயற்சி, தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் எவ்வளவு செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
வெளிவந்த தகவலின்படி, விடாமுயற்சி படம் 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 43 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.