தமிழ்நாட்டில் 4 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் துணிவு படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

கடந்த ஆண்டே வெளிவரவிருந்த இப்படம் சற்று ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், கடந்த வாரம் வெளிவந்தது. இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க, த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தமிழக வசூல் விவரம்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் விடாமுயற்சி படம் உலகளவில் இதுவரை ரூ. 131 கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், 4 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மட்டுமே 4 நாட்களில் விடாமுயற்சி படம் ரூ. 79 கோடியை கடந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    