தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் விடாமுயற்சி.. இதுவரை இத்தனை கோடியா
விடாமுயற்சி
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. லைகா இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருந்தனர்.
மேலும் இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும் மங்காத்தா படத்திற்கு பின் அஜித்துக்கு வில்லனாக அர்ஜுன் நடிக்க, ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் மிரட்டியிருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் விடாமுயற்சி திரைப்படம் 9 நாட்களில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
இந்த நிலையில், 9 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 88 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதியில் கண்டிப்பாக தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை விடாமுயற்சி கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.