அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் டீசர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மகிழ் திருமேனி. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் திரிஷா, அர்ஜுன் என மங்காத்தா கம்போ மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. இவர்கள் மட்டுமின்றி ரெஜினா, ஆரவ் என இன்னும் பல நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற தீபாவளி வெளியாகும் என்பது போல் கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என்கின்றனர். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
விடாமுயற்சி பட டீசர்
இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது விடாமுயற்சி படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பதற்காக தான். அதன்படி, அடுத்த வாரம் விடாமுயற்சி பட டீசர் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக விடாமுயற்சி படத்தின் டீசர் அஜித் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri