விடாமுயற்சி அப்டேட் கொடுத்த அர்ஜுன்.. தற்போதைய நிலை இதுதான்
விடாமுயற்சி
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு நிறுத்தப்பட்டது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு இருக்கும் நிலையில், பட்ஜெட் காரணமாக படப்பிடிப்பு துவங்காமல் இருந்து வந்ததாக சில பத்திரிகையாளர்களால் கூறப்படுகிறது.
அப்டேட் கொடுத்த அர்ஜுன்
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த நிலையில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தின் அப்டேட் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
இதில் "இந்த மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இருக்கிறது. இன்னும் 20 முதல் 30 சதவீதம் தான் படப்பிடிப்பு மீதமுள்ளது. அதன்பின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெரும்" என கூறியுள்ளார்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் சாப்பிட்டிருப்பார்கள் - பழனிசாமியை கலாய்த்த செந்தில்பாலாஜி IBC Tamilnadu
