அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்..
விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே துவங்க இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
செப்டம்பர் மாதம் துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என கூறப்பட்டது. ஆனால், அப்போதும் அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை.
![எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ](https://cdn.ibcstack.com/article/8b7f37fa-63bf-464c-9253-672383b52c2e/23-64ffdb1b83b3a-sm.webp)
எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ
லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் துவங்கும் என தெரிகின்றனர்.
மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.