விடாமுயற்சி படம் ட்ராப்பா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளரின் பேச்சு
அஜித்தை வைத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த வருடமே வந்தது. முதலில் விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவதாக தான் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பின் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி இயக்குனராக கொண்டுவரப்பட்டார்.
விடாமுயற்சி என படத்திற்கு டைட்டில் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்காமல் இருக்கிறது. இதனால் படம் ட்ராப் ஆகிவிட்டது என்றும் சமீபத்தில் தகவல் பரவ தொடங்கிவிட்டது. இதனால் அஜித் ரசிகர்களும் அதிருப்தியில் தான் இருந்தார்கள்.
லைகா விளக்கம்
இந்நிலையில் லைகா சுபாஷ்கரன் நேற்று சந்திரமுகி 2 பட விழாவில் பேசும்போது விடாமுயற்சி பட வதந்திகள் பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
விடாமுயற்சி படம் ட்ராப் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார். இதனால் அனைத்து வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
நடிகர் விஜயகுமாரின் பேத்திக்கு கல்யாணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?