தள்ளிப்போகும் விடாமுயற்சி படப்பிடிப்பு!.. படத்திற்கு எழுந்த புதிய சிக்கல்
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக்கவுள்ள படம் விடாமுயற்சி. கடந்த மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த முன்னிட்டு இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வருகின்ற மே 22 -ம் ஆரம்பிக்க இருந்தது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்காவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த உள்ளார்களாம்.
இந்த சம்பவத்தால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தாமதம் ஆகலாம் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
திரிஷா கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?.. உள்ளே பாருங்க!

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
