விடுதலை 2 படத்தின் First லுக் போஸ்டர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா
முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை முதல் பாகம். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மேலும் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை 2
விடுதலை 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கூடுதலாக இணைந்துள்ளனர்.

First லுக்
இந்த நிலையில், விடுதலை 2 படத்தின் First லுக் போஸ்டர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் விடுதலை 2 படத்திற்கான First லுக் போஸ்டர் அடுத்த வாரம் வெளிவரவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் சக்தி கூறியுள்ளார்.

ஆனால், இந்த First லுக் போஸ்டர் குறித்து விடுதலை படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri