ஐந்து நாட்களில் விடுதலை 2 உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த விடுதலை படத்தின் ஐந்து நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2023ல் வெளிவந்த படம் விடுதலை முதல் பாகம். இப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, கதையின் நாயகனாக மாறினார். இது அவருக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை 2 கடந்த வாரம் வெளிவந்தது. முதல் பாகத்தில் எப்படி சூரி முழுமையாக படத்தை சுமந்து சென்றாரோ, அதே போல் இரண்டாம் பாகத்தை தனது கதாபாத்திரத்தில் கொண்டு செல்கிறார் விஜய் சேதுபதி. வாத்தியாராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
இப்படத்தில் மஞ்சு வாரியர், கிஷோர், சேத்தன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள விடுதலை 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ஐந்து நாட்களில் ரூ. 42 கோடி வசூல் செய்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri