தமிழ்நாட்டில் ஐந்து நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடுதலை 2
இந்த ஆண்டு விடுதலை 2 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடித்திருந்தார்.
முதல் பாகத்தில் கதையின் நாயகனாக பட்டையை கிளப்பிய சூரிக்கு, இரண்டாம் பாகத்தில் குறைவான காட்சிகள் மட்டுமே இருந்தது. ஆனாலும், கிளைமாக்ஸில் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார்.
சூரி, விஜய் சேதுபதியை தாண்டி, விடுதலை 2ல் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர்கள் என்றால், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் மற்றும் கிஷோர் தான். கடந்த வாரம் வெளிவந்த விடுதலை 2 படம் நல்ல வரவேற்பை ஒரு பக்கம் பெற்றாலும், விமர்சனங்களை சந்தித்தது.
தமிழக பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், ஐந்து நாட்களை கடந்துள்ள விடுதலை 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 28 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.