10 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடுதலை 2
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - சூரி - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் விடுதலை 2. முதல் பாகத்தில் கதையின் நாயகனாக மக்கள் மனதில் சூரி இடம்பிடித்தார்.
அதை தொடர்ந்து வெளிவந்த விடுதலை இரண்டாம் பாகத்தில் வாத்தியாராக விஜய் சேதுபதி பட்டையை கிளப்பி இருந்தார். இளையராஜா இசையில் உருவான இப்படத்தில் மஞ்சு வாரியர், சேத்தன், கவுதம் மேனன், ராஜிவ் மேனன், தமிழ், இளவரசு என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த விடுதலை 2, அவர்களுடைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்கள் கிடைத்ததன் காரணமாக விடுதலை 2 படத்தின் வசூலும் குறைந்தது.
வசூல்
இந்த நிலையில், 10 நாட்களை கடந்துள்ள விடுதலை 2 படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
