விடுதலை 2 திரைவிமர்சனம்

Report

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இருக்கும். சமூக அக்கறை மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை அழுத்தமாக பேசி வருகிறார் வெற்றிமாறன்.

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

இவர் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. விடுதலை 2 ஆம் பாகத்தின் விமர்சனத்தை பார்ப்பதற்கு முன், விடுதலை 1 ஆம் பாகம் குறித்து பார்க்கலாம் வாங்க. 

விடுதலை முதல் பாகம்

மலை பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் இடத்தில் சுரங்கத்தை தோண்ட வளங்களை எடுக்க அரசாங்கம் முடிவு செய்கிறது. இதை செய்தால் மக்களின் இடம் பறிபோகும் என அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராக பெருமாள் வாத்தியார் { விஜய் சேதுபதி } தலைமையில் மக்கள் படை உருவாகிறது.

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

மக்கள் படை உதவியின் மூலம் அரசாங்கத்தை எதிர்த்து போராடி சுரங்கத்தை தோண்ட விடாமல் செய்கிறார் பெருமாள் வாத்தியார். மக்கள் படையை முழுமையாக ஒழித்துக்கட்ட அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படுவது தான் சிறப்பு படை.

மக்கள் படை மற்றும் சிறப்பு போலீஸ் படை இடையே நடக்கும் தொடர் கடும் பல உயிர்கள், இரு பக்கமும் பலியாகிறது. இந்த போராட்டம் பல ஆண்டுகள் கடந்த நிலையில், சிறப்பு படையில் ஜீப் டிரைவராக வந்து சேர்கிறார் கதையின் நாயகன் சூரி {குமரேசன்}.

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

முதலில் மலை பகுதியில் இருக்கும் Check Postல் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஜீப் மூலம் சாப்பாடு கொண்டு செல்லும் வேலையை தான் பார்க்கிறார் சூரி. இந்த சமயத்தில் மலை பகுதியில் வாழும் தமிழரசி { பவானி ஸ்ரீ } எனும் பெண்ணின் மீது காதலில் விழுகிறார். ஒரு பக்கம் காதல் ட்ராக் ஓடிக்கொண்டிருக்க மற்றொரு புறம் பெருமாள் வாத்தியாரை தேடுதல் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வாத்தியாராக பிடிக்க முடியாமல் சிறப்பு படை திணறிக் கொண்டிருக்க, புதிய அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார் கவுதம் மேனன் {DSP சுனில் மேனன்} .

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

இந்த நிலையில், ஒரு நாள் பெருமாள் வாத்தியார் தங்கியிருக்கும் இடத்தை சூரி பார்த்துவிடுகிறார். அதே சமயத்தில், தனது காதலிக்கும், கிராம மக்களுக்கும் போலீசால் கொடுமை நடக்கிறது என்பதை அறிந்த சூரி, விஜய் சேதுபதி இருக்கும் இடத்தை அதிகாரிகளிடம் சொல்ல முயற்சி செய்கிறார்.

DSP கவுதம் மேனனிடம் கூறி, பெருமாள் வாத்தியாரை பிடிக்க அவர் பதுங்கியிருக்கும் இடத்திற்கு போலீஸ் படையும் சூரி சென்று, சொன்னபடியே பெருமாள் வாத்தியாரை பிடித்துவிடுகிறார் சூரி. இதுவே விடுதலை முதல் பாகத்தின் கதையாகும்.

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

சரி விடுதலை இரண்டாம் பாகத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம் வாங்க.  

விடுதலை இரண்டாம் பாகம் 

வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறார். கவுதம் மேனன் இதை மேல் அதிகாரிகளிடம் கூற, அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர்.

விசாரணை நடந்து வரும் நிலையில், தமிழக தலைமை செயலாளர் இருக்கும் ராஜீவ் மேனன் உத்தரவின்படி, விஜய் சேதுபதியை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். விஜய் சேதுபதியை அழைத்து செல்லும் ஜீப் டிரைவராக சூரி இருக்கிறார். இந்த பயணத்தில் ஒரு கட்டத்தில் காட்டுக்குள் இவர்கள் சிக்கிக்கொள்ள எந்த பக்கம் போவது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

இந்த சமயத்தில் வாத்தியார் விஜய் சேதுபதி, தன்னுடைய முன் கதையை சொல்ல துவங்குகிறார். தனது கிராமத்து எதிராக, தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் கொடுமை, இனி அடுத்த தலைமுறைக்கு நடக்க கூடாது என்பதற்காக, கருப்பன் (கென் கருணாஸ்) ஒரு கொலை செய்கிறார்.

இதை அறிந்த விஜய் சேதுபதி, அவரை பண்ணை வீட்டாளர்களிடம் இருந்தும், போலீசிடம் இருந்து காப்பாற்ற, ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார். கருப்பனுக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது என போலீஸ் சொல்ல, அவரை போலீசில் சரணடைய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால், போலீஸ் துரோகம் செய்ய, கருப்பன் மற்றும் அவரது மனைவியை பண்ணை வீட்டாளர்கள் கொலை செய்கிறார்கள்.

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

இதில் விஜய் சேதுபதிக்கு உயிர் போகும் நிலைமை ஏற்படுகிறது. விஜய் சேதுபதியை கம்யூனிஸ்ட்டான கிஷோர் காப்பாற்றுகிறார். இதன்பின் கிஷோர் உடன் இணைந்து மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்கிறார் விஜய் சேதுபதி. ஒடுக்குமுறை, தீண்டாமை என, இதுபோல் பல விஷயங்களை வைத்து மக்களை அடிமைப்படுத்தி வருபவர்களுக்கு எதிராக போராடும் விஜய் சேதுபதி, அதே சிந்தனையை கொண்டுள்ள மஞ்சு வாரியரை சந்தித்து, காதலிக்கவும் துவங்குகிறார். இருவருக்கும் திருமணமும் நடக்கிறது.

தனக்கு உயிர் கொடுத்த கிஷோரை தனது உயிராக விஜய் சேதுபதி பார்க்கிறார். ஒரு கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வன்முறையாலும் தட்டிக் கேட்கலாம் என முடிவு செய்யும் விஜய் சேதுபதி, கிஷோரிடம் இருந்து வெளியேறுகிறார். விஜய் சேதுபதி வெளியேறிய சமயத்தில், கிஷோர் கொலை செய்யப்படுகிறார். தனது உயிரை நினைத்த ஒருவரை கொலை செய்தவர்களை பழி வாங்குகிறார் விஜய் சேதுபதி.

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

தனது கதையை சொல்லி முடித்த விஜய் சேதுபதி, பாலத்திற்கு வெடி வைத்தது எப்படி, அதனால் பல மக்களின் உயிர்களை போக காரணம் யார் என்பதையும் போலீசிடம் கூற, வாத்தியார் மீது உள்ள போலீசின் பார்வை மாறுகிறது. இந்த சமயத்தில் விஜய் சேதுபதியை காப்பாற்ற அவருடன் தோழர்கள் அங்கு வந்துவிடுகிறார்கள். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

இயக்குனர் வெற்றிமாறன் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் சிறப்பாக செதுக்கியுள்ளார். முதல் பாகத்தில் இடையிலேயே சென்ற தமிழ் என்கிற கதாபாத்திரம், இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுத்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்தது திரைக்கதையின் திருப்புமுனை.

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

முதல் பாகத்தில் இந்த கதையை சூரி சுமந்து சென்ற நிலையில், இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துடன் பயணிக்க வைக்கிறார் வெற்றிமாறன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அதிகாரம் என்னென்னவெல்லாம் செய்யும், தனக்கு அதிகாரம் கிடைக்கும் போது ஒரு மனிதம் எப்படி மாறுவான் என்பதை அழகாக காட்டியுள்ளார்.

போலீஸ் அதிகாரத்தின் கட்டளைக்கு கீழ் வேலை செய்கிறார்களா? அல்லது மக்களுக்காக வேலை செய்கிறார்களா என கேள்வி எழுந்த நிலையில், சூரி கதாபாத்திரம் எடுத்த முடிவு அருமையாக இருந்தது. கென் கருணாஸ் சில நிமிடங்கள் படத்தில் வந்தாலும் கூட, வாத்தியாரின் பாதைக்கு கென் கருணாஸின் வாழ்க்கை துவக்க புள்ளியாக அமைகிறது.

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

அதே போல் விஜய் சேதுபதியை வழிநடத்திய கிஷோர், மனைவியாக தோளோடு தோள் நின்ற மஞ்சு வாரியர், உடனிருந்த டி.ஏ, தத்துவத்தை பின்பற்றிய தோழர்கள் என திரைக்கதையில் புரட்சியின் வெளிப்பாடாக இருந்தது. ஆனால், விஜய் சேதுபதியின் பிளாஷ் பேக் போஷனின் சில குழப்பங்கள். அதை புரியும்படி எடுத்திருக்கலாம். மற்றபடி அனைவரும் திரைக்கதையுடன் ஒன்றி போகிறார்கள்.

திரைக்கதை, வசனம், இயக்கம் என வெற்றிமாறன் அசத்தியுள்ளார். மக்களுக்காக போராடிய, ஆனால் மக்களுக்கே தெரியாமல் உயிர் நீத்த தலைவர்களை பற்றி விடுதலை 2 படத்தில், இயக்குனர் வெற்றிமாறன் அழுத்தமான கருத்தை பதிவு செய்துள்ளார். அது மிகப்பெரிய தாக்கத்தை படம் பார்த்து முடித்தவுடன் ஏற்படுத்துகிறது.

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பலம். வேல்ராஜ் ஒளிப்பதிவு வேற லெவல். எடிட்டிங் சிறப்பு. ஆனால் டப்பிங் சில இடங்களில் சொதப்பிவிட்டது. கதாபாத்திரங்கள் லிப் சின்க், வசனங்களுடன் சில இடங்களில் ஒத்துப்போகவில்லை.

பிளஸ் பாயிண்ட்

வெற்றிமாறன் இயக்கம், வசனங்கள்

நடிகர்கள், நடிகைகள் நடிப்பு

பின்னணி இசை, பாடல்கள்

ஒளிப்பதிவு

அழுத்தமான கருத்துக்கள்

மைனஸ் பாயிண்ட்

இடைவேளைக்கு பின் திரைக்கதையில் ஏற்பட்ட சில குழப்பங்கள்

மொத்ததில், மக்களுக்காக போராடிய தலைவர்களின் வலியையும், அவர்களின் தத்துவத்தையும் பேசியுள்ள வெற்றிமாறனின் விடுதலை 2 படம், அவருடைய மகுடத்தில் சூட்டப்பட்டுள்ள மற்றொரு வாகை மலர்.  

விடுதலை 2 திரைவிமர்சனம் | Viduthalai 2 Movie Review


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US