தமிழகத்தில் விடுதலை 2 படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ
விடுதலை 2
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், முதல் பாகத்தை விட உலகளவில் அதிக வசூலை செய்தது.

சமீபத்தில் தான் விடுதலை 2 படக்குழுவினர் அனைவரும் இணைந்து தங்களது மாபெரும் வெற்றியை கொண்டாடினார்கள்.
வசூல்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் விடுதலை 2 படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விடுதலை 2 படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது என கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri