OTT - ல் வெளியானது, பெரும் எதிர்ப்பார்ப்புடன் திரைக்கு வந்த விடுதலை 2 திரைப்படம்.. எதில் தெரியுமா?
விடுதலை 2
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். சமூகத்திற்கு தேவையான படைப்புகளை கொடுத்து வரும் இவர் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம்பெறும் 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சிக்கு மட்டும் வெற்றிமாறன் 100 நாட்களை செலவழித்துள்ளார்.
இப்போது 2ம் பாக படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக சுமார் 1 மணிநேர காட்சி இணைந்து வெளியாகும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
எப்போது?
தற்போது, இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முன்பு இப்படம் ஜீ 5 தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில், நேற்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது.
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu