தமிழகத்தில் இரண்டு நாட்களில் விடுதலை படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ பாருங்க
விடுதலை 2
விடுதலை இரண்டாம் பாகம் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஆண்டு வெளிவந்த விடுதலை முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.
சூரியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. கடத்த 20ஆம் தேதி வெளிவந்த விடுதலை இரண்டாம் பாகம் ஒரு பக்கம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், படத்திலுள்ள குறைகளையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
வசூல்
இந்த நிலையில், இரண்டு நாட்களை கடந்துள்ள விடுதலை இரண்டாம் பாகம் திரைப்படம், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.