விடுதலை 2 படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
விடுதலை 1 & 2
கடந்த ஆண்டு வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படங்களில் ஒன்று விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக அது சமூகத்தில் உள்ள பிரச்சனையையும் பேசும் என்பதை அனைவரும் அறிவோம்.
அப்படி மக்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரம் குறித்தும், அதனை எதிர்த்துப் போராடுவதைக் குறித்தும் பேசிய படம் விடுதலை. இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார். மேலும் வாத்தியாராக விஜய் சேதுபதி, கவுதம் மேனன், இளவரசு, ராஜிவ் மேனன், சேட்டன், தமிழ் ஆகியோர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை 2 வருகிற 20ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் கூடுதலாக மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி சம்பளம்
இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் விடுதலை 2 படத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விடுதலை 2 படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி ரூ. 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
