வெற்றிமாறனின் விடுதலை படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சூரி இல்லை.. இவர் தான்
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்து வருகிறார்.
மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் காவல் துறை அதிகாரியாக இயக்குனர் கவுதம் மேனனும் நடித்துள்ளார்கள்.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகி வெளியாகும் என வெற்றிமாறனின் பிறந்தால் ஆன இன்று அறிவித்துள்ளனர்.
முதல் சாய்ஸ்
இந்நிலையில், விடுதலை படத்தில் சூரி நடித்துள்ள கதையின் நாயகன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் வடிவேலு தானாம்.
எதோ சில காரணங்களால் இப்படத்தில் வடிவேலுவால் நடிக்கமுடியாமல் போக அதன்பின் சூரி இப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.