மீண்டும் OTT - யில் விடுதலை 2, ஆனால் தற்போது ஒரு ட்விஸ்ட்.. என்ன தெரியுமா?
வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். சமூகத்திற்கு தேவையான படைப்புகளை கொடுத்து வரும் இவர் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஒரு ட்விஸ்ட்
இந்த இரண்டு பாகமும் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியான நிலையில், தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, இந்த படம் வெளியான நேரத்தில் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் இருந்தது.
தற்போது நீக்கப்பட்ட சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக இப்படம் மீண்டும் வெளியாகி உள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கண்டு வருகின்றனர்.

உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri